Home | Contact us | Site Map               

Socio Economic Service Society

                        Regd. No: 166/1984

 

 

 

 About us | Activities | Education Endowment | Statistics DataDonors | BenefeciariesDirectory | Jobs | Gallery | Events | Matrimonial

Activities

 

 

 

தொண்டு மன்றத்தின் உறுப்பினர்களும் உறவினர்களும் இந்த அமைப்பு மூலமோ, நேரடியாகவோ உதவி புரிந்தும் பெற்றும் சமுதாய முன்னேற்றம் காண்பதே அடிப்படை நோக்கம். பயிற்சி வகுப்புகள், திறமைபோட்டிகள், திருமணத் தகவல் மையம் ஆகியவற்றை நடத்துதல், படிப்புதவித்தொகை மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கல் முதலியவை மாநில அளவில் சென்னையில் தொண்டு மன்ற அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் ஒருஊரில் உள்ள உறுப்பினர்கள் தங்களுக்குள் பழகவும், உதவி புரிந்து கொள்ளவும், உள்ளூர் பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், ஒரு அமைப்பு உள்ளூர் அளவில் இருந்தால் வசதியாக இருக்கும் என்று கருதி, தொண்டு மன்றத் துணைவிதி 19(8)ன் படி உள்ளூர்க் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

ஆற்றக் கூடிய பணிகள்

கல்வி

1, தொண்டு மன்றம் அல்லது இதர அமைப்புகள் நடத்தும் கீழ்கண்ட பயிற்சி வகுப்புகளில் சேர உள்ளூர் மாணவர்களை ஊக்குவித்தல்

அ)  +1 முடித்து +2  போகுமுன் கோடை விடுமுறைியல் பயிற்சி வகுப்பு
ஆ) +2  தோவு எழுதப் பயிற்சி வகுப்பு
இ) நுழைவுத்தேரவுகள் எழுதப் பயிற்சி வகுப்பு 9வது வகுப்பு முடித்து 10வது வகுப்பு போகுமுன் கோடை விடுமுறையில் பயிற்சி வகுப்பு
உ) 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குக் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் தனிப்பயிற்சி இவற்றில் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றால்   எளிதில் சேர இயலும்
எ) த்டடெழுத்து, சுருக்கெழுத்து, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள்
2, பள்ளிகள், தொழில் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகளில் சேர உதவுதல்.
3. அரசும், அறக்கட்டளைகளும் நடத்தும் மாணவர் விடுதிகளில் சேர உதவுதல்.
4. அரசும், நிறவனங்களும் வழங்கும் படிப்புதவித்தொகை பெற உதவுதல்.
5, திறமை அடிப்படையில் படிப்புதவித்தொகை வழங்க மைய அரசும், சில அமைப்புகளும் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள ஊக்குவித்தல்.
6, தொண்டு மன்றச் செய்தி இதழில் அறிவிக்கும் படிப்புதவித்தொகை பெறத்தகுதியுள்ள மாணவர்கைள்ப பரிந்துரைத்தல், பரிசுகள் பெற ஊக்குவித்தல் மற்றும் திறமைப்போட்டிகளில் பங்கேற்கச் செய்தல், தொண்டு மன்றத்திற்ககு நன்கொடைகள் அனுப்பச் செய்தல்.

வேலைவாய்ப்பு

7, தொழில் வணிக நிறுவனங்களில் வேலைபெற உதவுதல்
8, தொழில் தொடங்கத் தொழில் நுட்ப ஆலோசனையும் நிதி நிறுவனங்களின் உதவியும் கிடைக்கச் செய்தல்,
9. சுய வேலைவாய்பபுக்கு அரசு மானியமும், வங்கிக் கடனும் கிடைக்கச் செய்தல்.

மருத்துவம்

10. சிறப்பு மருத்துவர்கிளடம் சிகிச்சை பெற உதவுதல்
11, மருத்துவ முகாம்கள் நடத்துதல்.
12. இரத்த தானம் மற்றும் கண் தானம் செய்வித்தல்.

சட்டம்

13. சமுதாயக் கோயில்களின் நிர்வாகம், சமுதாயச் சொத்துக்கள் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்காக வழக்காட வழக்கிறஞர்கள் மூலம் உதவுதல்,
14, ஏடிழகளுக்கு இலவசச் சட்ட உதவி கடைக்கச் செய்தல்.
15, சமுதாயத்தினருக்குள் ஏற்படும் சச்சரவுகளைச் சுமூகமாகத் தீர்த்தல்.

சமுதாயப் பணி

16, உள்ளூர் உறுப்பினர்களின் இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் பங்ேக்றறல்.
17. உடற்பயிற்சி நிறுவனங்கள் நடத்துதல்.
18. வீட்டுமனைப் பட்டா பெற உதவுதல்.
19, சிக்கனத் தமிழ்த் திருமணம் செய்வித்தல்.
20, தின்ச சிறப்பு பெறும் உள்ளூர் உறவினர்களுக்கும், உறவு மாணவர்களுக்கும் சிக்கனமாகப் பாராட்டு விழடி நடததுதல்.

அமைப்பு

தொண்டு மன்ற உறுப்பினகர்கள் 10 பேருக்கு மேல் உள்ள ஊரில் உளளூர் குழு அமைக்கப்படலாம்.

உள்ளூர் குழு 7 உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக இருக்கும் (செயற்குழுக் கூட்ட தீர்மான எண் 75014 தேதி 03-08-1997ன் படி உள்ளூர்க குழு உறுப்பினர்களின் எண்ணிககை 5லிருந்து 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது)

உள்ளூர் குழுவின் தலைவரை அந்த மண்டலச் செயற்குழு உறுப்பினரிக்ன பரிந்துரைப்படி மாநிலச் செயற்குழு நியமனம் செய்யும்.

நியமனம் செய்யப்படும் உள்ளூர்க குழுத் தலைவர், ஊரில் உள்ள மற்ற உறுப்பினகர்களைக் கலந்து ஆலோசித்துத் துணைத்தலைவர், செயலர் மற்றும் நான்கு உறுப்பினர்களை நியமித்துகச்கொண்டு தொண்டு மன்றத்திற்குத் தெரியப்படுத்துவார். கூடியவரை ஒரு ஆசிரியர், ஒரு மருத்துவர், ஒரு வழக்கிஞர், ஒரு மகளிர், 40 வயதுக்குட்பட்ட ஒருஇளைஞர் உள்ளூர்க் குழுவில் இருத்தல் தொண்டு பணிகள் புரிய உதவியாக இருக்கும்.

மாநிலச் செயற்குழுவின் பணிக்காலமாகிய மூன்று ஆண்டுகளுக்கு உள்ளூர்க் குழுக்கள் பணிபுரியும். தற்போது நியமனமாகும் உள்ளூர்க குழுக்கள் 30-06-2008 வரை பணிபுரியும். முன்னர் நியமிக்கப்பட்வையின் பணிக்காலம் 30-06-2005 உடன் முடிந்துவிட்டது.

செயல் முறை

7பேர் அடங்கிய உள்ளூர்க குழுவின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் கூடுவதென்று முடிவு செய்து தெரிவித்துவிட வேண்டும். பின்னர், ஒவ்வொரு கூட்டத்திற்கும் அறிவிப்பு அனுப்பத் தேவையில்லை.

செயற்குழு உறுப்பினர் சிறப்பழைப்பாளராக இருப்பார், தீவிர ஈடுபாடுள்ள உள்ளூர் உறுப்பினர்கள் சிலரையும் சிறப்பழைப்பாளர்களாகக் கொள்ளலாம். குறிப்பாக பொருள் நிரல் ஏதுமில்லையென்றாலும், கூடிய தேநீர் அருந்தி களையலாம். இம்மாதிரி கட்டுப்பாட்டுக்கும், தொண்டு புரியவும் அரிமா சங்கம் போன்ற அமைப்புகள் முன்மாததிரியாகும்.

கூட்ட நடவடிக்கைகளை உள்ளூர்க் குழு செயல் ஒரு குறிப்புப் புத்தகத்தில் குறித்துக்கொண்டு வருகை தரும் உறுப்பினர்களின் கையொப்பம் பெற வேண்டும். நடிவடிக்கைக் குறிப்பை உடனே தலைமையத்திற்கும், செயற்குழு உறுப்பினருக்கும் அனுப்ப வேண்டும்.

கூட்டம் நடக்கும்போது சிற்றுண்டி அல்லது தேநீர் மட்டும் வழங்கலாம். கூட்டம் நடத்தவும் அஞ்சல் தொடர்பாகவும் ஆகும் சில செலவுகளை உள்ளூர்க குழு உறுப்பினர்களே ஏற்றுக்கெர்ளளலாம். நிதி தேவைப்படும் பணி ஏதாவது மேற்கொள்ள ேவ்ணடுமென்றால் விவரங்களுடன் தலைமையத்துக்கு எழுதி முன் அனுமதி பெற வேண்டும். உள்ளூர்க் குழு நேரடியாக நன்கொடை பெறுதல் கூடாது. தொண்டு மன்றக் கணக்கில் வரவு செலவு செய்யும் வகையில் தொண்டு மன்றம் மூலம் பெறலாம்.

மண்டலச் செயற்குழு உறுப்பினர் உள்ளூர் குழுவின் செயல்பாட்டை மேற்பார்வை செய்துவழி நடத்துவதோடு, மாநிலச் செயற்குழுவுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

சிறந்த மண்டலம் மற்றும் உள்ளூர்க் குழுத் தேர்வு செய்ய அளவுகோல்கள்

ஒவ்வொரு ஆண்டும் சுழற்கேடயம் வழங்க சிறந்த மண்டலம், சிறந்த உள்ளூர்க் குழு ஆகியவற்றைத் தேர்வு செய்வதற்ககு கீழ்கண்ட அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சிறந்த மண்டலம்

1, படிப்புதவித் தொகைவழங்கக் கிடைக்கும் நன்கொடைகள்.
2, படிப்புதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை.
3, பயிற்சி வகுப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை.
4, மருத்துவ முகாம்நடத்தக் கிடைக்கும் நன்கொடைகள்.
5, மண்டலஅளவில் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் மூன்று நிலை மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசுகள் அளித்தல்.
6, மண்டல அளவில் கட்டுரை, பேச்சு, சித்திரம், தமிழிசை, சமையல் முதலிய திறமைகளில் போட்டிகள் நடத்தி ஊக்கப்பரிசுகள் அளித்தல்.
7, புதிய ஊர்களிலுந்து உறுப்பினர் சேர்த்தல்.
8. மண்டலத்தில் செய்யப்படும்இதர பணிகள்.

சிறந்த உள்ளூர்க்குழு

1, மாதம் ஒருமுறை கூடுதல் (ஓரு கூட்டத்திற்கு ஒருமதிப்பெண் வீதம் மொத்தம் 6 மதிப்பெண்கள் வரையறை)
2. தொண்டு மன்றப் பயிற்சி வகுப்புகளில் மாணர்கள் சேர்த்தல்.
3, பயிற்சி பெறப் பொருளுதவி செய்தல்.
4. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துதல்.
5. மருத்துவ உதவி அளித்தல் மற்றும்மருத்துவ முகாம்நடத்துதல்.
6, திருமணத் தகவல் மையம் நடத்துதல்.
7. வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், கல்லூரிகளில் சேர்க்கை முதலியன பெற உதவுதல்.
8, உறவினர்களிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்தது வைத்தல்.
9, உள்ளூர் செய்யப்படும் இதர பணிகள்.

 

 

 

 

 

 

 

 
 
 Become a member | Donate us | Contact Us | Sitemap

Copyright © 2022   All rights reserved

cheap air jordans|pompy wtryskowe|cheap huarache shoes| bombas inyeccion|cheap jordans|cheap air max| cheap sneakers|wholesale jordans|cheap china jordans|cheap wholesale jordans|cheap jordans|wholesale jewelry china