Home | Contact us | Site Map               

Socio Economic Service Society

                        Regd. No: 166/1984

 

 

 

 About us | Activities | Education Endowment | Statistics DataDonors | BenefeciariesDirectory | Jobs | Gallery | Events | Matrimonial

Matrimonial

 

 

 

திருமணம் நாடும் வரன்கள் பற்றிய தகவல்களைப் பெற்று அளிக்க திருமணத் தகவல் மையம் ஒன்று தொண்டு மன்ற அலுவலகத்தில் 1985 ஜூலை முதல் இயங்கிவருகிறது, உறுப்பினர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இதன் நடைமுறை பின்வருமாறு விளக்கப்படுகிறது,

பதிவுக்குத் தகுதி

ஓர் உறுப்பினரின் அல்லது அவருடைய உறவினரின் திருமண வயது அடைந்த மகன் அல்லது மகன் வரனாகப் பதிவு செய்யப்படும் தகுதி உடையவர்.

தகவல் குறிப்பு

வரனின் வயது, நிறம், உயரம், எடை, படிப்பு, பணி, ஊதியம், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் பற்றிய விவரம், ஜாதகம், தேவைப்படம் வரனின் தகுதிகள் முதலிய தகவல்களைக் குறித்து வரனின் புகைப்படம் இணைத்து அனுப்பும் வகையில் ஒரு படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. எல்லா வரன்களின் தகவல் குறிப்புகளும் கோர்த்து வைக்கப்படும். கோப்பைப் புரட்டிப்பார்க்க வசதியாகவும், ஒரே சீராகவும் இருக்கும் போருட்டு பாஸ்போர்ட் அளவு வண்ணப்படடம் பொருத்த, படிவத்தின் முதல் பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜாதகம் பற்றிய தகவல்களைத் தெளிவாகக் குறிக்க படிவத்தில் கட்டங்கள் தரப்பட்டுள்ளளன.


இப்படிவத்தை உறுப்பினர் ரூ.10/- செலுத்தி நேரிலோ, அஞ்சல் மூலமோ பெறலாம். அஞ்சல்மூலம் பெற ரூ.5/- அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாச மிட்ட உறை அனுப்ப வேண்டும்.

உறுப்பினர் அல்லாதவர் ஓர் உறவு உறுப்பினரின் பரிந்துரைக் கடிதமும், ரூ.10/- ம் செலுத்தி படிவம் பெறலாம். உறுப்பினர் அல்லாதவரின் வரன் தகவல் குறிப்பில் அவருடைய உறவு, உறவின் தன்மையைக் குறிப்பிட்டு உரிய இடத்திலும், உறுப்பினரின் கையொப்பம், பெறப்பட வேண்டும். உறுப்பினர் அல்லாதவர் நேரடியாகத் தோண்டு மன்றத்திற்கு எதினால் படிவம் அனுப்பப்படமாட்டது. பதிவும் செய்யப்படமாட்டாது.

தகவல் குறிப்புப் படிவத்தை விடுதல் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பூர்த்தி செய்ய வேண்டும். குறைகள் இருந்தால் பதிவு செய்ய இயலாது.

பதிவு செய்யப்பட்டபின் ஜாதகக் கட்டம் பற்றிய விவரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்கப்படமாட்டாது. படிப்பு வருவாய், முகவரி, தொலைபேசி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே தகவல் குறிப்பில் குறிக்கப்படும்.

3. பதிவு செய்தல்:

முழுமையாகப் பூர்த்தி செய்த தகவல் குறிப்புடன், வரன் ஓர் உறுப்பினரின் மகன் அல்லது மகளாக இருப்பின் ரூ.1200/-ம் பதிவு நன்கோடையாகச் செலுத்தி, வரனைப் பதிவு செய்யலாம். தொகை (Socio Economic Service Society) யின் பெயரில் A/c Payee கேட்போலையாக இருத்தல் வேண்டும் குறிப்பையும், கேட்போலையையும் நேரில் அளிக்கலாம். அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம். நேரில் ரொக்கமாகவும் செலுத்தி இரசீது பெறலாம். வரனின் பள்ளி / கல்லூரி மற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் சாதி சான்றிதழ்(Community Certificate) இணைக்கப்படவேண்டும்.

மேற்படி படிவத்தில் அளிக்கப்படும் தகவல் குறிப்புக்கு வரிசை எண் அளித்து, பதிவு செய்யப்பட்டு, கோப்பில் சேர்க்கப்படும். வரனின் வரிசை எண் அளித்து, பதிவு செய்யப்பட்டு, கோப்பில் சேர்க்கப்படும். வரனின் வரிசை எண், பெயர், பதிவு முடிவடையும் தேதி கொண்ட ஒரு பதிவு அட்டை வழங்கப்படும். ஆண், பெண் வரன்களுக்குத் தனித் தனியாகக் கோப்புகள் வைக்கப்படுகின்றன.

4. தகவலுக்குப் பொறுப்பு:

ஒரு தகவல் குறிப்பபில் உள்ள தகவல்களுக்கு அந்தக் குறிப்பைத் தருபவரே பொறுப்பு. பதிவு செய்ய தரப்படும் ஒரு வரன் பற்றிய குறிப்பைப் பதிவு செய்துள்ள இதர வரன்களின் பெற்றோர்களுடைய பார்வைக்கு வைத்தல் மட்டுமே இந்த மையத்தின் பணியாகும்.

5. தகவல் அறிதல்:


பதிவு செய்யப்படும் ஒவ்வொரு தகவல் குறிப்பி சுருக்கமும் (பெயர், வயது, ஊர், படிப்பு, பணி) அடுத்து வரும் தொண்டுச் செய்தி இதழில் வெளியிடப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இந்த இதழ் கட்டணமின்றி உறுப்பினர்களுக்கு மட்டும் அனுப்பப்படுகிறது. இதில் வெளிவரும் சுருக்கத்தில் பெற்றோர் பெயர், முகவரி முதலியவை இல்லாமையால் வரன் யார் என்று வெளிப்படையாகத் தெரியாது. இருப்பினும், சுருக்கம் வெளியிட வேண்டாம் (Not for Publication) என்று படிவத்தின் தலைப்பில் குறிப்பிட்டு அனுப்பினால், அந்த வரன் பற்றிய தகவல் சுருக்கம் இதழில் வெளியிடப்படுவதில்லை. ஆனால் பதிவுப் படிவம் உரிய கோப்பில் வைக்கப்படும்.

மையத்தில் பதிவு செய்யப்படும் வரன்களுககு 1.11.86 முதல் தொடர் வரிசை எண் வழங்கப்படுகிறது. திருமணம் உறுதி செய்யப்பட்டதாகவோ அல்லது நடந்துவிட்டதாகவோ பதிவு செய்தவர்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன், அந்த வரன்களின் பதிவுப் படிவம் கோப்புகளிடமிருந்து நீக்கப்பட்டு திருமணமானோர் கோப்பில் சேர்க்கப்படும். மேலும் அந்த வரன்களின் பெயர்கள், தொடர் வரிசை எண்களுடன் தொண்டுச் செய்தி இதழில் திருமணத் தகவல் பகுதியில் வெளியிடப்படுகின்றன.

6. தகவல் குறிப்புப்படிகள்:

தொண்டுச் செய்தி இதழில் வரும் தகவல் சுருக்கத்தைப் பார்த்து, ஒரு வரன் தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஒத்துவருவதாகத் தெரிந்தால், அந்த வரன் பற்றிய முழுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் குறிப்பின் நகல் (படி) தேவை என்று தொண்டு மன்றத்திற்கு ரூ10/- செலுத்தி, ரூ5/- க்கான அஞ்சல் தலை ஒட்டிய உறை அனுப்பி வரிசை எண், பெயர் குறிப்பிட்டு எழுதினால், அத்தகவல் குறிப்பு புகைப்படம் மட்டும் இல்லாமல் அனுப்பி வைக்கப்படும். ஒரு சமயத்தில் ஒரு வரனின் படி மட்டுமே கோரலாம். இது வரன் பதிவு செய்யாதிருந்தால் தகவல்கள் தரப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது.

7. கோப்புகளைப் பார்வையிடல்:

தகவல் குறிப்பு நகல்களை அஞ்சல் மூலம் பெறுவதைவிட அலுவலகத்துக்கு நேரே வந்து எல்லாத் தகவல் குறிப்புகளையும், புகைப்படங்களுடன் பார்த்து, தங்களுக்குப் பிடித்தமான வரன்கள் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்துக் கொண்டு, பிறகு உரியவர்களோடு தொடர்பு கொள்ளுவது பயனுள்ளதாக இருக்கும்.

வரன் தகவல் குறிப்பை பதிவு செய்தவரோ, அவரால் அனுமதிக்கப்படும் நெருங்கிய உறவினரோ பதிவு அட்டையுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து அதைக் காண்பித்து கோப்புகளைப் பார்வையிடலாம்.

பார்வையிடும் நேரம் தினமும் பகல் 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை. செவ்வாய்க்கிழமை வார விடுமுறை நாள். இதர மன்றத்தின் பொது விடுமுறை நாட்களிலும் பார்வையிட இயலாது. பதிவு அட்டையைக் காண்பிக்காமல் கோப்புகளைப் பார்க்க இயலாது.

தன் வரனைப் பதிவு செய்யாத ஒருவர் மற்ற வரன்கள் பற்றிய தகவல் குறிப்புகளைப் பார்க்கவோ, அவற்றின் நகல்களைப் பெறவோ அனுமதியில்லை. மற்றவர்கள் பதிவு செய்ய வேண்டும், தான் மட்டும் அவற்றைப் பார்க்க வேண்டும், ஆனால் தான் பதிவு செய்யத் தேவையில்லை என்று ஒருவர் உரிமை கோரினால், அவர் யாராக இருப்பினும் அதில் எந்தவித நியாயமும் இல்லை என்று செயற்குழு இரண்டு முறை தீர்மானித்துள்ளது.

8. தொடர்பு கொள்ளுதல்:

தகவல் குறிப்புப்படி ஒரு வரன் பிடித்தமாக இருந்தால் அந்தக் குறிப்பைப் பதிவு செய்துள்ள உறுப்பினருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டும், இதர வகைகளில் விசாரித்தும் மேற்கொண்டு முயற்சியைத் தொடரவேண்டும். அவருக்கு எழுதும் கடிதத்தில் தன் வரனின் பெயரையும், வரிசை எண்ணையும் தவறாமல் குறிப்பிட்டால்தான் அவர் அந்த வரனின் தகவல் குறிப்பைஅலுவலகத்தில் பார்த்து ஒரு முடிவுக்குவரமுடியும். ஒரு வரனின் தந்தை வேறு வரனின் தந்தையை நேரில் சந்தித்துப பேசவோ பெண் பிள்ளை பார்க்கவோ, கடிதம் எமுதினாலோ, விரைவில் பதில் அளித்தல் அவசியம். உடன்பாடு இல்லையென்றால். அவ்வாறு எழுதத் தயங்குவது இயற்கைதான். ஆனால் ஜாதகம் பொருந்தவில்லை என்றாவது எழுதிவிட்டால், மற்றவர் வேறு வரன் பார்க்க முற்படுவார்கள் அல்லவா? தான், மற்றவர்களின் கடிதங்களுக்குப் பதில் எழுதாவிட்டால், மற்றவர்களும் தன்னுடைய கடிதங்களுக்குப் பதில் எழுதமாட்டாாடகளட எனடபதை மனத்தில் கொண்டு உடனுக்குடன் கடிதம் எழுதுவது நலம்.

9. பதிவு நீட்டிப்பு:

ஒரு வரனுக்குத் திருமணம் நிறைவேறிய உடன் தெரியப்படுத்தினால் அந்த வரனின் படிவம் கோப்பிலிருந்து நீக்கப்படுவதுடன் திருமணம் பற்றிய செய்திக் குறிப்பு தோண்டுச் செய்தி இதழில் வெளியிடப்படும் என்பது நடைமுறையாகும். தெரியப்படுத்தாமையால் சில வரன் குறிப்புகள் கோப்பில் இருந்து கொண்டு மற்ற வரன்களில் பெற்றோர்களுக்குச் சங்கடங்கள் உண்டாக்கி வருகின்றன. எனவே கோப்பில் வைத்திருக்கும் காலம் பதிவு செய்த தேதியிலிருந்து ஓர் ஆண்டு என்றும், மீண்டும் நீட்டிக்கலாம் என்றும் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு காலம் ஓராண்டாகும். ஒரு வரன் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓர் ஆண்டு முடிந்ததும், அந்த வரனுடைய குறிப்பு கோப்பினின்றும் நீக்கப்பட்டுவிடும். அப்படி நீக்கப்படாமல் அந்த வரன் குறிப்பு கோப்பில் மேலும் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று விரும்பினால், வரனைப் பதிவு செய்தவர் மேற்சொன்ன தேதிக்கு முன் (குறைந்தபட்சம் ஒரு வராத்திற்கு முன்பே) ரூ.100/- நன்கொடை அளத்தது, மேலும் ஓர் ஆண்டுக்கு புதிய பதிவு எண்ணுடன் நீட்டித்துக் கொள்ளலாம். இரண்டாம் ஆண்டுக்கு நீட்டிக்கப்படமாட்டாது. புதிய பதிவாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

10. மறு பதிவு செய்தல்:

நீட்டிப்பு கோரி விண்ணப்பம் வராமையால் நீக்கப்பட்டுவிட்ட ஒரு வரன் தகவல் குறிப்பை மீண்டும் பதிவு செய்ய வேண்டுமென்று விரும்பினால் அது புதிய பதிவாகக் கருதப்பட்டு, உறுப்பினர் அல்லாதவரிடமிருந்து பதிவு நன்கொடையாக ரூ. 800/-ம், உறுப்பினராக இருந்தால் ரூ.300/-ம் பெற்று மறுபதிவு செய்யப்படும். மறுபதிவு கோரும் வரன் தகவல் குறிப்பில் முந்தைய குறிப்பில் இருந்த ஜாதக விவரங்களில் மாற்றம் இருந்தால், மறுபதிவு செய்யப்படமாட்டாது.

11. நிறைவு:

திருமணம் நடைபெற்றவுடன் திருமணச் செய்தியையும், மணமக்களின் புகைப்படத்தையும் அனுப்பினால், அவை கிடைத்தபின் அடுத்து வெளிவரும் தொண்டுச் செய்தி இதழில்  ஒரு பக்க விளம்பரம் இலவசமாக வெளியிடப்படும்.

12. வேண்டுகோள்:

மேற்சொன்ன நடைமுறைகளைச் சீராகப் பின்பற்றித் திருமணத் தகவல் மையத்தின் சேவையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறோம். உறவினர் அல்லாத வரன்களைப் பதிவு செய்ய உறுப்பினர்கள் துணை போக வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறோம். வரன் பதிவுகள் குறித்து அவ்வப்போது தொண்டுச் செய்திஇதழில் வெளியிடப்படும் குறிப்புகளைப் பார்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 

 

 

 

 

 


 

 

 
 
 Become a member | Donate us | Contact Us | Sitemap

Copyright © 2022   All rights reserved

cheap air jordans|pompy wtryskowe|cheap huarache shoes| bombas inyeccion|cheap jordans|cheap air max| cheap sneakers|wholesale jordans|cheap china jordans|cheap wholesale jordans|cheap jordans|wholesale jewelry china